2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு: பதவியை தக்க வைக்க முனைப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதியாக இருக்கும் விளாடிமிர் புட்டினின் பதவிக்காலம் அடுத்த வருடம் (2024) மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து முடிவு எடுப்பதற்காக ரஷிய பாராளுமன்றம் நேற்றையதினம் (08) கூடியது. 

இதன்போது,  2024-ம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் 5-வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு விளாடிமிர் புட்டின் போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றிப்பெற்றால் 2036 வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்கும் வகையில் பல சீர்திருத்தங்களை அவர் செய்துள்ளார். எனவே தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியை தக்க வைப்பதில் அவர் முனைப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .