2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து

Freelancer   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை நேற்று  நடைபெறவிருந்த நிலையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ உட்பட பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளத் தீர்மானித்திருந்தனர்.
 
ஆனால், திட்டமிடல் பிரச்சினை காரணமாகப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோவினால் கலந்துகொள்ள முடியவில்லை என அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதனையடுத்து அந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .