2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

‘யாகி’யால் சீனாவில் விமானங்கள் இரத்து

Freelancer   / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் ஹைனான் தீவில் சக்தி வாய்ந்த ‘யாகி’ சூறாவளி புயல் தாக்கியதை அடுத்து, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால், 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

சீனாவின் ஹைனான் தீவுப்பகுதியை சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. இதற்கு, ‘யாகி’ என பெயரிடப்பட்டிருந்தது.

ஹைனான் தீவில் வென்சாங் நகரை நோக்கி, மணிக்கு 245 கி.மீ., வேகத்தில் இந்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக, அங்குள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் இப்புயல் புரட்டிப் போட்டது. இதன் காரணமாக, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியே இருளில் மூழ்கியது.

இதைத்தொடர்ந்து ஹைனான் தீவை ஒட்டியுள்ள குவாங்டாங் மாகாணத்தையும் இந்தச் சூறாவளி தாக்கியது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு வசித்த 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியதில், இரண்டு பேர் பலியாகினர்; 92 பேர் காயமடைந்தனர்.

இதேபோல், ஹைனான் தீவில் உள்ள மூன்று விமான நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. இதனால், 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

ஹைனான் தீவு மற்றும் குவாங்டாங் மாகாணத்தை கடந்த யாகி சூறாவளி, குவாங்ஜி ஜுவாங்க் மற்றும் வடக்கு வியட்நாம் கடற்பகுதிக்கு இடையே இன்று கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .