2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மைதானத்துக்குள் கோர விபத்து:35 பேர் பலி; 43 பேர் காயம்

Freelancer   / 2024 நவம்பர் 13 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா - ஜுஹாய் நகரில், திங்கட்கிழமை (11) இரவு, 62 வயது வயோதிபர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜுஹாய் நகரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில், திங்கட்கிழமை இரவு 7.48 மணிக்கு, பொதுமக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, குறித்த வயோதிபர்,  காரை ஓட்டிச் சென்று, அவர்கள் மீது மோதியுள்ளார்.

இதை தொடர்ந்து, காரை ஓட்டிச் சென்ற வயோதிபர் கைது செய்யப்பட்டார். எனினும், இது விபத்தா அல்லது தாக்குதலா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X