Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசித்திரமான சட்டங்களை கொண்டுள்ள வடகொரியாவில் உள்ள பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அந்த நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் மேடையிலேயே கண்கலங்கி அழுதார்.
உலகில் மர்மதேசமென அழைக்கப்படும் நாடுளில் ஒன்று வடகொரியா. இந்த நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இந்த நாட்டில் பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ளன. அதோடு கிம்ஜாங் உன் சர்வாதிகாரி போல் அந்த நாட்டை ஆட்சி செய்து வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. அதோடு அமெரிக்காவை எதிர்க்க பல நாடுகள் அஞ்சும் நிலையில் கிம்ஜாங் உன் அதற்கு விதிவிலக்காகவுள்ளார். இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 2.61 கோடி மட்டும் தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக்கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்கலங்கியுள்ளார். வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது:
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்.
அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும்.
முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்தார்.
வடகொரியாவை பொறுத்த வரையில் 1970-80 காலக்கட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டது. இதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கிடையே தான் கடந்த 1990ல் இருப்பினும், 1990ல் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பலியானார்கள். இதையடுத்து அந்த நாட்டில் மக்கள் தொகை என்பது மேலும் சரிய தொடங்கியது. இதையடுத்து தான் சமீபத்தில் பெண்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்ததோடு, அந்த பெண்களுக்கான இலவச வீடு, மானியங்கள், இலவச உணவு, மருந்து மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கான கல்விச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளை விட அதிகம் தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago