2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி கைது விவகாரம்:புதிய பிடியாணையை கோர முஸ்தீபு

Freelancer   / 2025 ஜனவரி 06 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்வதற்கான பிடியாணை காலாவதியாக உள்ளதை தொடர்ந்து, அவரை கைது செய்வதற்கான புதிய பிடியாணையை பிறப்பிக்க கோரி, அந்நாட்டு ஊழல் தடுப்பு துறையினர் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

தென்கொரியாவில், வரவு-செலவு திட்ட பிரேரணை  தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசர நிலை இராணுவ சட்டத்தை அமுல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை அவர் திரும்பப்பெற்றார்.

இந்த விவகாரத்தில், பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வந்தனனர். மேலும், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியிலும் புலனாய்வு அதிகாரிகள் இறங்கினர்.

யூன் சுக் இயோல் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதாரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். யூன் சுக் இயோல் எந்நேரத்திலும், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், புலனாய்வு அதிகாரிகளின் கைது முயற்சி வெற்றிபெறவில்லை. இது தொடர்பாக கடந்த வாரம் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

யூன் சுக் இயோலை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் தவறியதை அடுத்து, தென்கொரிய ஊழல் தடுப்பு துறையினர், பொலிஸார்  நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக தென்கொரிய ஊழல் தடுப்பு துறை மற்றும் பொலிஸார் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதையடுத்து, யூன் சுக் இயோலை கைது செய்வதற்கான பிடியாணை காலாவதியாக உள்ளது. இதையடுத்து, யூன் சுக் இயோலை கைது செய்ய புதிய பிடியாணை பிறப்பிக்க கோரி, ஊழல் தடுப்பு துறையினர் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X