Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் நகரில் ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வினோத ஒலி கேட்டுள்ளது. இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக முனைந்தனர்.
இதில், டேனியோனெல்லா செரிப்ரம் (Danionella cerebrum) எனும் மிகச் சிறிய வகை மீன் ஒன்று அதன் அங்கங்களில் ஒன்றான "ஸ்விம் ப்ளாடர்" (swim bladder) எனும் உறுப்பில் இருந்து சக்திமிக்க சீரான ஒலியை உண்டாக்குவது தெரியவந்துள்ளது.
இந்த மீன் வெளிப்படுத்தும் ஒலியின் அளவு மீன் தொட்டியின் நீர் நிலைகளில் 140 டெசிபெல் (decibel) என பதிவாகியுள்ளது. இது ஒரு துப்பாக்கி சூட்டின் ஒலிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.
“12 மில்லிமீட்டர் நீளம் மட்டுமே உள்ள இந்த டெனியோனெல்லா மீன் எழுப்பும் ஒலிதான் உலகின் அனைத்து வகை மீன் இனத்திலும் எழுப்பப்படும் அதிகமான ஒலியாகும். "டிரம்மிங்" (drumming) எனப்படும் இத்தகைய ஒலியானது ஒரு வகையான செய்தி பரிமாற்றம்” என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “டெனியோனெல்லா மீன்களின் உடல் கண்ணாடி போன்று ஒளி - ஊடுருவும் தன்மை கொண்டதால் அவை உயிருடன் இயங்கும் போதே ஆராய்ச்சி செய்வது எளிதாக இருந்தது.” என தெரிவித்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago