2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மீண்டும் வெனிசுலாவின் ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மதுரோ

Freelancer   / 2024 ஜூலை 29 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசூலாவின் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தாலேயே, இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பானது, வெனிசுலாவின் 25 வருட இடதுசாரி ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவது பற்றிய எதிர்கட்சியினரின் கனவை கலைக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மதுரோ தனது வெற்றியை தனது வழிகாட்டியான மறைந்த ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸக்கு அர்ப்பணித்ததுடன் தேர்தல் வெற்றிக்குப் பின் கராகஸில் ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார்.

அதில், “நான் எங்கள் ஜனநாயகம், எங்கள் சட்டம் மற்றும் எங்கள் மக்களைப் பாதுகாப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .