2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

’மில்டன்’ புயலால் 16 பேர் பலி

Freelancer   / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா - புளோரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மில்டன் புயலால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால்,  அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது.

அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தது.

இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு, இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26ஆம் திகதி, ஹெலீன் புயல் தாக்கியமை  குறிப்பிடத்தக்கது. (AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X