2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மிஞ்சிப்போன உணவை சாப்பிடும் ஐடியா மணி

Mayu   / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர்களில் பலரும் பண சம்பாதிப்பதிலும், பணத்தை செலவழிப்பதிலுமே வேறுபடுவார்கள். பணத்தை சிலர் தண்ணீராக செலவழிப்பார்கள், பலரோ மிக மிக சிக்கனமாக இருப்பார்கள். அதிகம் செலவழிப்பவர்களையும் இந்த உலகம் திட்டும், கஞ்சனாக இருப்பவரை நோக்கியும் முகம் சுழிக்கும். ஆனால், ஒரு நபர் தனது வினோத செயல் மூலம் பல லட்சங்களை சேமித்துள்ளார். 

நியூயார்க்கில் உள்ள பல உயர்தர உணவகங்களில் மீந்துபோகும் உணவை உண்டு தனது வயிற்றை நிரப்பியுள்ளார். அதாவது, இதை முதலில் கேட்கும்போது, வறுமையின் பிடியில் அந்த நபர் சிக்கியிருக்கலாம் என உங்களுக்கு தோன்றும். ஆனால் அவர் வறுமையால் வாடவில்லை, இது சற்று வினோதமாக தோன்றலாம். ஆனால் இது ஆச்சர்யமளிக்கும் உண்மையாகும். 

 சாப்பிட முடியாமல் மீந்துபோகும் உணவுகளை சாப்பிடுவது என்றால் நீங்கள் குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து சாப்பிடுவார் என நினைக்க வேண்டாம், அவர் அதிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை செய்துள்ளார். 

அதாவது, TooGoodToGO செயலியை பயன்படுத்தி  பல சுவையான உணவுகளையும் உண்டு, பணத்தை சேமித்துள்ளார். இந்த செயலி என்பது உயர்தர உணவகங்களில் இருந்து மிஞ்சிப்போகும் உணவுகளை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க பயன்படும். அமெரிக்காவில் ஓராண்டுக்கு 80 டன் உணவுகள் வீணாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற செயலிகள் மூலம் உணவுகள் வீணாகாமல் தவிர்க்கலாம். பல மக்களும் உணவுகளை குறைந்த விலையில் பெறுவார்கள். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X