2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

மார்பகத்திற்காக நிதி திரட்டும் யுவதி

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுவதியொருவர் தனது மார்பகத்தின் அளவை சிறியதாக்க மக்களிடம் நிதி திரட்டிவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் நார்தாம்ப்டன்ஷையரில் (Northamptonshire) வசித்து வரும்  கார்லி ஸ்மார்ட்  என்ற 21 வயதான யுவதியே இவ்வாறு தனது மார்பகத்தை சிறிதாக்க  நிதி திரட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகமொன்றில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதி அவரது சிறுவயது முதலே பெரிய மார்பகங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளதாகவும், அவர் 17 வயதைக்  அடைந்தவுடன் அவரது மார்பகத்தின் அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதாகவும், தற்போது  அவரது மார்பக எடை மாத்திரம்  9 கிலோகிராமாக உள்ளதாகவும் இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் முதுகுவலி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும்  அவர் பணிபுரியும் இடத்தில் அவரது  மார்பகத்தை வைத்து சக ஊழியர்கள் கேலி செய்வதாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் இதனால் தனது மார்பகத்தை சிறியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்ய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்குறிய  மருத்துவ செலவுகள் அதிகமாகக் காணப்படுவதால் பொதுமக்களிடம் நிதி வழங்கி உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X