2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

’மராபி’ எரிமலை வெடித்து சிதறியது

Freelancer   / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இந்தோனேசியாவில் உள்ள மராபி எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (27) பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது. 

இதன்போது, சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. 

இதையடுத்து, குறித்த எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள அகம் மாவட்டத்தில் 9,480 அடி உயரம் கொண்ட ‘மராபி’ எரிமலை திடீா் வெடிப்புகளுக்கு புகழ்பெற்றதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X