2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

மியான்மர் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவில் 7.7 ஆக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தற்போது அந்த பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மியான்மரின் பெரும்பகுதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பேரழிவின் உண்மையான அளவு இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புக் குழுக்கள் போதுமான அளவில் இல்லாததால், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான வாய்ப்பு மங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா, சீன, ரஷ்யா ஆகிய நாடுகள் மியான்மருக்கு அளித்து வருகின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .