Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வருடத்தின் இறுதியில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.
அப்போது ஓய்வூதியம் வாங்கும் முதியவர் ஒருவர் புட்டினிம் முட்டை விலை, கோழி இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த புதின் “இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும் என நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.
ரஷ்யாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பல்வேறு தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago