2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

மனைவியின் சாம்பலில் பானை செய்த கணவன்

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில், நபர் ஒருவர், தனது மனைவியின் சாம்பலை கொண்டு களிமண்ணில் பானை செய்து பாதுகாத்து வருகிறார்.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பியாவோ ஷூடாங். இவரது மனைவி லாங்ஐகுன, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

மனைவியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பியாவோ, தனது மனைவியின் சாம்பலை கொண்டு களிமண்ணில் பானை செய்து பாதுகாத்து வருகிறார்.

இது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பியோவோ கூறுகையில், “இந்த கலசம் என்னுடையது. நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யலாம். நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம்” என்றார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X