Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி அலைபேசி மையம் (call center) மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயற்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில், அண்மை காலமாக போலி அலைபேசி மையம் (call center) மோசடிகள் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதற்காக நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி படித்த இளைஞர்களுக்கு வலை விரிக்கப்படுகிறது.
ஆனால் அங்கு சென்ற பிறகு கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு இணைய மோசடியில் ஈடுபட அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் சீன தொழிலதிபர்களே குறிவைக்கப்பட்டதால் ஆங்கிலம், சீன மொழி தெரிந்த இளைஞர்களை மோசடி கும்பல் அதிகளவில் பணியமர்த்தியது.
இதிலிருந்துந்து ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள் அண்மையில் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே இதுதொடர்பான வழக்கு விசாரணை சீன நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago