2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

பைடன் விலகினார்

Freelancer   / 2024 ஜூலை 22 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ.,5ஆம் திகதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 78, வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், 81, போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிகாகோவில், அடுத்த மாதம், 19 - 22ல் நடக்கும் கட்சியின் மாநாட்டில் அவர் முறைப்படி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான நேரடி வாத நிகழ்ச்சியில், டொனால்ட் டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஜோ பைடன் திணறினார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என, அவருடைய கட்சியில் பலரும் குரல் கொடுக்கத் துவங்கினர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து, ஜோ பைடன் விலகி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன். எஞ்சியிருக்கும் என் பதவி காலம் முழுவதும், ஜனாதிபதியாக எனது கடமையை நிறைவேற்றுவேன். இதுவே என் கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியிலும் அவருக்கு ஆதரவு உள்ளதால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X