Freelancer / 2024 ஜூலை 25 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

‛‛அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேச்சு புரிந்து கொள்ள முடியவில்லை. மோசமாக இருந்தது” என முன்னாள் ஜனாதிபதியும், குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‛‛இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதே சிறந்தது என நான் முடிவு செய்தேன். நமது தேசத்தை ஒன்றிணைக்க இதுவே சிறந்த தருணம். அமெரிக்காவை மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தது இல்லை. மக்கள் தான் ஆட்சி புரிந்தனர்” என்று பேசினார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: “ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஜோ பைடன் ஆற்றிய உரையானது அரிதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் மோசம்.
ஜோ பைடன் மற்றும் பொய் சொல்லும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்காவிற்கு தர்மசங்கடமானவர்கள். இது போன்று காலம் எப்போதும் இருந்தது இல்லை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.S
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025