2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பைடனுக்கு மூளை பாதிப்பு: ஊடகவியலாளர் தகவல்

Freelancer   / 2024 ஜூலை 03 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் இருப்பதாகவும் ஆனால் இதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால் டிரம்ப்க்கு எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கடந்த வாரம் அட்லாண்டாவில் நடைபெற்ற டொனால் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் ஜோ பைடனின் வாய் குலரல் மற்றும் தடுமாற்றங்கள் சொந்த கட்சியினரையே கவலை அடைய வைத்துள்ளன.

இந்நிலையில் அவருக்கு டிமெண்டியா எனப்படும் மறதி நோய் அல்லது மூளை பாதிப்பு நோய் இருப்பதாகவும் இதை ஊடகங்கள் மறைத்து விட்டதாகவும் பாஃக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், பைடனுக்கு பதிலாக தற்போது துணை அதிபராக உள்ள இந்திய ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்துமாறு அவரை வலியுறுத்தியுள்ளார்.

இதே கருத்தை ஜனநாயக கட்சியின் மூத்த எம்.பியும் முன்வைத்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில் ஜோ பைடனை விட கமலா ஹரிசுக்கே பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .