2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பேங்கொக்கில் சுற்றுலா பயணிகள் விஷம் கொடுத்து கொலை

Freelancer   / 2024 ஜூலை 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளனர். அந்நகரிலுள்ள பிரபல கிராண்ட் ஹயாட் எர்வான் ஹோட்டல் அறையில் தங்கிய 6 பேரும் இறந்து கிடப்பதாக ஊழியர் பொலிஸில் தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில்இ கொல்லப்பட்ட 6 பேரில் நால்வர் வியட்நாம் நாட்டையும் இருவர் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

ஆறு பேரில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் இருந்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில், 6 பேரும் அருந்திய தேநீர் கோப்பைகளில் சயனைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பலகோடி ரூபாய் முதலீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 6 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொலஸார் தகவல் தெரிவித்தனர். மேலும், சயனைடை தேநீரில் கலந்து கொடுத்த நபரும் அதையே அருந்தி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அதேசமயம், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .