Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் திருநங்கைகள், பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து ஜனாதிபதி டொனால்ட் ட் ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பது" உத்தரவு ஒருவர் பிறக்கும் போது ஒதுக்கப்படும் ‘பாலினம்’ என்பதை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க கூட்டாட்சி நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
இது தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு பேசிய டிரம்ப், "இந்த நிர்வாக உத்தரவின் மூலம், பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்றுள்ளது முதல் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு உத்தரவுகளை தொடர்ச்சியாக பிறப்பித்து வருகிறார். மேலும், இவரது பல்வேறு கருத்துக்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முடிவுகள் உலக அளவில் அதிர்வலைகளையும், கடும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன.
இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திருநங்கைகளுக்கு எதிரான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் திருநங்கைகள் பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளார். (S.R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago