2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

பெண்களை கண்காணிக்கும் ஈரான் அரசு

Freelancer   / 2025 மார்ச் 17 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று, ஐநா தெரிவித்துள்ளது.

ஐ.நா அறிக்கையின்படி,

“ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமுல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

“இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் புகாரளிக்க பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.

“மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

“செப்டம்பர் 2024 முதல், அம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

 

“ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டுக்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்” என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு அறநெறிப் பொலிஸாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதை தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X