2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

பெஞ்சமினுக்கு ட்ரம்ப் அழைப்பு

Freelancer   / 2025 ஜனவரி 29 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை மாளிகைக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். 

இதனை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை வெள்ளை மாளிகை அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அடுத்த வாரம்,  ட்ரம்பை வெள்ளை மாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அவரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் சர்வதேச தலைவர் பெஞ்சமின் நேதன்யாகு ஆவார் என்று, இஸ்ரேல் பிரமதர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு முதல் முறையாக  டிரம்ப் மற்றும்  நேதன்யாகு சந்திக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X