2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

பூனைக்காக இப்படியா செய்வது? வியப்பூட்டும் தம்பதி

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் வின்கான்சின் என்னும் பகுதியை அடுத்த மேனோமோனி ஃபால்ஸ் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் Shawn Redner. இவரது மனைவியின் பெயர் Hilary Siegel-Redner.
இவர்கள் இருவரும்  பூனைகள்  மீது மிகவும் அன்பு கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  ஷான் மற்றும் ஹிலாரி ஆகியோர் பூனைமீது கொண்ட அளவு கடந்த அன்பால் அவர்களது வீட்டை கடந்த 2020 ஆம்  பூனை அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர்.

ஆரம்பத்தில், மொத்தம் 4000 பூனை உருவங்களை அவர்கள் வீட்டில் பார்வைக்காக வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக, மேலும் 3000 பூனை உருவங்களை தங்கள் வீட்டின் அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளனர்.
மேலும், இவர்கள் 8 பூனைகளையும் வளர்த்து வருகின்றனர்.

 இந்நிலையில்  ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் எனவும், இந்த இடத்தை ஒரு காஃபி ஷாப்பாக மாற்ற விரும்புவதாகவும் ,இங்கே காஃபி குடிக்க வருவபவர்கள், தங்களின் பூனையை கூட கொண்டு வரலாம்  எனவும் அத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .