2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புழு, பூச்சி உணவுக்கு அனுமதி

Freelancer   / 2024 ஜூலை 10 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள அந்நாட்டு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் (எஸ்.எப்.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது.

விற்பனையை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர்களை கவர இந்த பூச்சிகள் அடங்கிய புதிய உணவு வகைகள் உதவும் என உணவு விடுதிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

அந்தவகையில், ஒரு சில உணவு விடுதிகள் 30 வகையான பூச்சிகள் அடங்கிய உணவு வகைகளையும் சுட்டி காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .