Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அர்ஜென்டினா நாட்டில் நவம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் செர்ஜியோ மாசா, ஜேவியர் மிலே ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலில் ஜேவியர் மிலே வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளராக பணியாற்றியபோது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடுமையான கேள்விகளால் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பதவியேற்றபின் போது உரையாற்றிய அவர், நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார். நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும், இது தவிர்க்க முடியாதது என்றும் கூறினார்.
பின்னர் ஜேவியர் மிலே தனது முதல் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதில் அமைச்சகங்களின் எண்ணிக்கையை 18 இருந்து 9 ஆக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜேவியர் மிலே பிரசாரத்தின்போது கலாச்சாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்களை அகற்றுவதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago