2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

புட்டினை கொலை செய்ய திட்டம்?

Freelancer   / 2025 ஜனவரி 30 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புட்டினுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தியாளர் டக்கர் கார்ல்சன், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குறிப்பிட்டார். இருப்பினும் தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

இந்த விவகாரம் ரஷ்ய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புட்டினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி மெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு தங்கள் நாட்டின் பாதுகாப்பு படை மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

 இருப்பினும் புதினை கொல்லும் முயற்சி எதுவும் முறியடிக்கப்பட்டதா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ரஷ்ய பாராளுமன்ற சபாநாயகர் வயாசெஸ்லாவ் வோலோடின், இந்த விவகாரத்துக்கு காட்டமான முறையில் பதிலளித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புட்டினை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதும், அதைப் பற்றி விவாதிப்பதும் மிகப்பெரிய குற்றமாகும். அது உலக பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் இது அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

புட்டினை கொல்ல அமெரிக்கா சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது இது முதல் முறை அல்ல. 

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது தலை துண்டித்து கொலை செய்ய அமெரிக்க பாதுகாப்புத்துறை திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த தகவலை மூட நம்பிக்கை என்று கூறி ரஷ்யா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X