2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

Freelancer   / 2024 நவம்பர் 25 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெர்ட் புயல் பிரித்தானியாவை தாக்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்தநிலையில், பிரித்தானியா முழுவதும் 400 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
அத்துடன், ஸ்கொட்லாந்து, வேல்ஸின் மேற்கு பகுதிகள், தென்கிழக்கு பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தில் பலத்த காற்றுடனான மழைவீpழ்ச்சி பதிவாகக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
 
பலத்த காற்று வீசுவதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X