2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

Freelancer   / 2024 ஜூலை 05 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.

பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. 

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கும் மேல் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. கீர் ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 

14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடிக்கிறது. பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியே வந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பது நினைவுகூரத்தக்கது. பிரிட்டனில், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .