2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் தாய்லாந்தும் இணைந்தது

Freelancer   / 2025 ஜனவரி 01 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைந்துள்ளது. 

இதன்படி, இன்று (1) முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ளது

இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 

“பிரிக்ஸ் அமைப்பின் 2024ஆம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷ்யா, கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி வெளியிட்ட செய்தியில், 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதனால், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் வகையில் ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும்,  அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாய்லாந்து நாட்டுடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளும், இன்று (1) முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகியுள்ளன.

பிரிக்ஸ் அமைப்பானது நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், 2006ஆம் ஆண்டு ரஷ்யாவால் நிறுவப்பட்டது. இதில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் உறுப்பினராக இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.

சுழற்சி முறையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி ரஷ்யா இதன் தலைமையை ஏற்றது. 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அமைப்பின் உறுப்பினராக அதிகாரப்பூர்வ முறையில் இணைந்தன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X