Freelancer / 2024 ஜூன் 13 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீயால் 600 ஹெக்டேர் தீயில் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில் மவுரஸ் மவுசீப் என்ற வனப்பகுதி உள்ளது.
கரடு முரடான மலை குன்றுகளுடன் கூடிய இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பிடித்தது. காற்று வீச்சு காரணமாக கண் இமைக்கும் நேரத்தில் மளமளவென வனப்பகுதி முழுவதும் காட்டுத்தீ பரவியது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வனப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவி உள்ள காட்டுத்தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியை சுற்றி இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், காட்டுத்தீ பரவல் காரணமாக அங்கு இதுவரை 600 ஹெக்டேருக்கும் மேலான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.S
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025