2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பிரான்சிஸின் உடல்நிலை முன்னேற்றம்

Freelancer   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று வாரமாக சிகிச்சை பெற்று வரும் கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, ஜெமெல்லி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர்கள், செவிலியர்களுக்கு போப் பிரான்சிஸ் நன்றி தெரிவித்தார். தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டார்.

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .