2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பின்தங்கியதால் நிகழ்வை இரத்து செய்த கமலா

Freelancer   / 2024 நவம்பர் 06 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, இன்றுறு காலை வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகியது. 

இந்த நிலையில் ஹோவர்ட் பல்கலைகழகத்தில் கமலா ஹாரிஸ், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேச இருந்த நிலையில் வாக்குப் பதிவில் தான் பின்னதங்கிய நிலையில் இருந்தால், இந்த நிகழ்ச்சியை இரத்து செய்துள்ளார்.

"இன்னும் எண்ண வேண்டிய வாக்குகள் எங்களிடம் உள்ளன. இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படுவதை உறுதி செய்ய, ஒவ்வொரு குரலும் பேசுவதை உறுதி செய்ய, ஒரே இரவில் தொடர்வோம். 

“எனவே, இன்று இரவு துணை ஜனாதிபதியிடம் இருந்து நீங்கள் உரையை கேட்க மாட்டீர்கள். ஆனால் நாளை அவளிடமிருந்து நீங்கள் கேட்பீர்கள், அவர் நாளை இங்கு வருவார், தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் உரையாற்றுவார்" என கமலா ஹாரிஸின் பிரசார இணைத் தலைவர் செட்ரிக் ரிச்மண்ட் கூறினார்.AN

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X