2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

பாலஸ்தீனியர்களை விடுவிக்க மறுக்கும் இஸ்ரேல்

Freelancer   / 2025 ஜனவரி 26 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று,  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 290 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. குறிப்பாக, சனிக்கிழமை (25)  இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் 4 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 200 பாலதீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணையும் ஹமாஸ் ஆயுதக்குழு, சனிக்கிழமை (25) விடுதலை செய்ய வேண்டுமென, இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஆனால், அர்பெல் யாஹுட்டை, ஹமாஸ் ஆயுதக்குழு  விடுதலை செய்யவில்லை.

இந்நிலையில், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும் வரை பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று, இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

“போர் நிறுத்த ஒப்பந்தப்படி அர்பெல் யாஹுட் சனிக்கிழமை (25) விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை. ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது. இதனால், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை வடக்கு காசாவுக்கு பாலஸ்தீனியர்களை திரும்ப அனுமதிக்கமாட்டோம்” என, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X