Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 08:31 - 0 - 18
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரிப்பதாக, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை கைப்பற்றி அதன் மக்களை வெளியேற்றும் முடிவை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
அந்த அறிவிப்பினை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதில் ஒரு பகுதியாக அமீரகத்துக்கு, புதன்கிழமை (19) அவர் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, அமைச்சர் மார்கோ ரூபியோ, அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெறும் ஐடெக்ஸ் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி வளாகத்திற்கு சென்றார். அப்போது அங்கு பார்வையிட வருகை தந்திருந்த அமீரக ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் மத்திய கிழக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், காசாவில் உள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகள், பிரதேச அளவிலான அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்கள் பற்றி பேசப்பட்டன.
அப்போது அமீரக ஜனாதிபதி மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் கூறுகையில்,
"இருநாட்டு தீர்வை அடிப்படையாக கொண்டு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் ஒரு பாதையுடன் இணைப்பதன் மூலம் காசாவின் மறுகட்டமைப்பை பிரதேச அளவில் உறுதி செய்வது முக்கியம். பிரதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மோதல் விரிவடைவதை தடுக்க வேண்டியது அவசியமாகும்.
“அதேபோல் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும் அமீரகம் நிராகரிக்கிறது. இதில் அமீரகம் உறுதியாக உள்ளது என மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago