2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

பார்க்கோடை கையில் பச்சை குத்திய இளைஞர்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானைச்  சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது முழங்கையில் பார்கோடை பச்சைக் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண பரிவர்த்தனைக்கு அடிக்கடி தொலைபேசியை எடுக்க சோம்பேறித்தனமாக இருந்ததால், அவர் இவ்வாறு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அப்போது தான் எனக்கு ‘பார்கோடையே பச்சையாகக் குத்தினால் என்ன?‘ என்ற யோசனை  பிறந்தது.

இதனையடுத்து பார்கோடை பச்சை குத்திக்கொண்டேன். எனினும் பார்கோடை பச்சை குத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாக எனக்கு இருந்தது. ஏனெனில் இது பச்சைக் குத்துபவருக்கு ஒரு சவாலாக இருந்தது. எனவே யாரும் இதை முயற்சிக்கவேண்டாம் . எல்லோருக்கும் இந்த முயற்சி சரிவராது. அதுமட்டுமல்லாது   இதனைப்  பாதுக்காப்பது என்பது தனக்கு பெரும் சவலாக உள்ளது ” என்றார்.

இதற்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது சருமத்திற்குள், கார்டின் சிப்பை பொறுத்தி,பண பரிவர்த்தனை செய்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X