2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பாம்பை விரட்ட வீட்டைக் கொளுத்திய நபர்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவர் பாம்பை விரட்டுவதற்காக வீட்டையே கொளுத்திய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பூல்ஸ்வில்லே  அதிக விஷ பாம்புகள் நிறைந்த பகுதியாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் வசித்து வந்த  நபர் ஒருவரின் வீட்டிற்கு  எதிர்பாரத விதமாக அண்மையில் பாம்பொன்று புகுந்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத அவர் அப் பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருப்பதை மறந்து பாம்பை விரட்டுவதற்காக நெருப்பு புகையை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போது  எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள பொருட்களில் தீ பற்றிக் கொண்டதால் வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து அயலவர்கள் தீயணைப்புத்  துறையினருக்கு தெரியப்படுத்தவே அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் வெகுநேரமாக போராடி தீயை அணைத்துள்ளனர்.

இத் தீ விபத்திலும் வீட்டிற்குள் புகுந்த பாம்பின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X