2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பாடசாலையில் துப்பாக்கி சூடு: 10 பேர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்வீடனில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 10 பேர் உயிரிழந்தனர்.

 ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரிபுரொ நகரில் மேல்நிலை பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடசாலையில் நேற்று (4) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி  சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .