2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை

Freelancer   / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

கடந்த மாதம் 1ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியல்களின்படி, பாகிஸ்தானில் மொத்தம் 266 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதில் 49 சிவில் கைதிகள் மற்றும் 217 மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்களை நேற்று கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X