2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து கத்மண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனா ஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள பாதையில் சென்றபோது பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பயணிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நெடுஞ்சாலையில், பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் மீது பாறைகள், மண் கொட்ட, சாலையில் இருந்து பஸ் அப்படியே ஆற்றில் விழுந்துள்ளது.

காலநிலை மாற்றம், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இதுபோன்ற விபத்துகளினால் கடந்த ஜூலை மாதம் வரை 62 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .