2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

பலூச் போராளிகளால் கடத்தப்பட்ட ரயிலுக்குள் நுழைந்த இராணுவம்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 13 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலூச் போராளிகளால் கடத்தப்பட்ட ரயிலொன்றுக்குள் புதன்கிழமை (12) நுழைந்த பாகிஸ்தானிய ஆயுதப் படைகள், 33 தாக்குதலாளிகளைக் கொன்று ஒரு நாளாக நீடித்த 214 பயணக்கைதிகள் நிலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பலூசிஸ்தான் தலைநகர் குவாட்டாவிலிருந்து 440 பேருடன் பெஷாவருக்குச் சென்ற ஜஃபான் எக்ஸ்பிரஸ் மீது கற்களை எறிந்த போராளிகள், ரயில் பாதையை செவ்வாய்க்கிழமை (11) தகர்த்திருந்தனர்.

மோதலில் 21 பணயக் கைதிகளும், நான்கு பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் அறிவிப்புக்கு முன்னதாக 50 பயணிகளை புதன்கிழமை மாலை தாம் கொன்றதாகத் தெரிவித்த தாக்குதலுக்கு உரிமை கோரிய பலூச் விடுதலை இராணுவம், பெரும்பாலும் பாதுக்காப்பு படையினரை உள்ளடக்கிய 214 பேரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

பலூச் அரசியல் கைதிகள், செயற்பாட்டாளர்கள், இராணுவத்தால் கடத்தப்பட்ட காணாமல்போனோரை விடுவிக்கும் 48 மணித்தியால கெடு கடந்தால் பணயக்கைதிகளைக் கொல்வோம் என அச்சுறுத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X