Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 மே 21 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா அருகில் உள்ளது பப்புவா நியூ கினியா தீவு. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தீவுகள் உள்ளன.
இந்நிலையில், பப்புவா நியூ கினியாவில், மொரோபியின் வடகிழக்கே 58 கிலோமீட்டர் (36 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 45 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் இலேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதோடு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
47 minute ago
52 minute ago