Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
திங்கட்கிழமை (21) காலை 7.30 மணியளவில் நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசின் இறுதிச் சடங்கு 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
இந்த இறுதிச் சடங்கில், பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜெர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ் கலந்து கொள்வார். போப்புடன் தனிப்பட்ட உறவைப் பகிர்ந்து கொண்ட பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் வத்திக்கான் நகரத்திற்கு பயணம் செய்வார்.
போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா கலந்து கொள்கிறார், மேலும், போலந்தில், சனிக்கிழமையை தேசிய துக்க நாளாகவும் அறிவித்துள்ளார்
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் அலுவலகம் அவர் செல்வதை உறுதிப்படுத்தியது.
உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இறுதி சடங்குக்கான திகதி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே கலந்து கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸின் பிறப்பிடமான அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே, போப் பிரான்சிஸ் மரணமடைந்த சில மணி நேரங்களுக்குள்ளே, இறுதி சடங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் வத்திக்கான் நகரத்திற்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளத் திட்டமிடவில்லை என்று கிரெம்ளினின் பத்திரிகைச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிச் சடங்கில் ரஷ்யாவை யார் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago