2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

பனிப்புயலால் 10 பேர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 23 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் பலியாகினர். அத்துடன்,3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கியுள்ளது.

அமெரிக்காவின்  புளோரிடா மாகாணத்தில், கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.

மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை வெள்ளை பனி மூடியது. குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது. அங்கு 23 செல்சியஸ் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொண்டது என அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செல்சியஸுக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக, அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதனால் அந்த நாட்டின் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன, வீதி மற்றும் ரயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டுள்ளது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2,000 விமானங்கள் இரத்தாகின. 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X