2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பனிப்பாறை வேகமாக நகர்வதால் அபாயம்

Freelancer   / 2023 நவம்பர் 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூயார்க் மாநகரை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1986ம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை.. லண்டன் மாநகரை விட இரு மடங்கும், நியூயார்க்கை விட 3 மடங்கும் பெரியதாகும். A23a என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஏனெனில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர்.

இதுபற்றி விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், 1986 ஆம் ஆண்டில் மேற்கு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர்-ரோன் ஐஸ் ஷெல்ஃப் பகுதியில் இருந்து பிரிந்த பாறை தான் A23a. உலகிக் மிகப்பெரிய பனிப்பாறையான இது ஏறக்குறைய 4,000 சதுர கி.மீ (1,500 சதுர மைல்கள்) பரப்பரளவில் உள்ளது.. A23a அண்டார்டிக் பனிப்பாறை நியூயார்க் நகரத்தை விட மூன்று மடங்கு பெரியதாகும். லண்டன் மாநகரை விட இரண்டு மடங்கு பெரிய பாறையாகும்.

ஒரு காலத்தில் சோவியத் யூனியன் இந்த பனிப்பாறையில் தான் ஆராய்ச்சி நிலையத்தை நடத்தியது. இந்த பனிப்பாறை கடந்த 37 வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது.

இனி அப்படியே நிற்காது. ஏனெனில் அந்த பாறைப்பாறை தற்போது நகரத் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு டிரில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள இந்த பாறையானது, பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களின் உதவியால், அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையை கடந்து வேகமாக நகர்ந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களும் பனிப்பாறை நகர்வதை உறுதி செய்துள்ளன என்றார்கள்.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே பனிப்பாறை நிபுணர் ஆலிவர் மார்ஷ் கூறும் போது, "உலகின் மிகப்பெரிய அளவில் உள்ள இந்த பனிப்பாறையை நகர்த்தும்போது, அதனை பார்ப்பது அரிது. எனவே விஞ்ஞானிகள் அதன் பாதையை உன்னிப்பாகக் கவனித்தது வருகிறார்கள்.

இந்த ராட்சத பாறை சற்று ஆவியாகி உள்ளதால், எடை குறைந்து காற்று மற்றும் கடல் நீரோட்டம் குறைந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர்கிறது. A23a பாறை தெற்கு ஜார்ஜியா தீவினை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த தீவினை இந்த பனிப்பாறை சென்றால்,, அண்டார்டிகாவின் வனவிலங்குகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பல்லாயிரம் உயிரினங்கள், பென்குயின்கள் மற்றும் கடற்பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்றும் தெரிவித்தள்ளனர்.   M 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X