Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 மார்ச் 06 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் கடுமையான பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக 35 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களில் எதிர்பாராத வகையில் அளவுக்கு அதிகமான பனிப் பொழிவும், கன மழையும் கடந்த சனிக்கிழமை (02) முதல் தொடா்ந்து வருகிறது. இதில், 22 சிறுவா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தனா்.
அவா்களில் பெரும்பாலானவா்கள் பனிப் பொழிவால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதையுண்டதால் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா். பாகிஸ்தானில் பொதுவாக மார்ச் மாதத்தில் பருவநிலை மிதமாகத்தான் இருக்கும்.
ஆனால், காஸ்பியன் கடலில் உருவாகி கிழக்கு நோக்கி நகரும் மேற்கத்திய பருவநிலை கோளாறு மண்டலத்தால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்கள், வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப் பொழிவு ஏற்படுவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago