2025 மார்ச் 15, சனிக்கிழமை

பணய கைதி விவகாரம்:இஸ்ரேல் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்

Freelancer   / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணய கைதி விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.

பணய கைதி விவகாரம் தொடர்பில், ட்ரம்ப் விதித்த காலக்கெடு சனிக்கிழமையுடன் (15) முடிவடைந்தது. இந்நிலையில், இதுபற்றி சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“3 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. அவர்களில் அமெரிக்க குடிமகனும் ஒருவர் அடங்குகின்றார். அவர்கள் நல்ல நிலையில் காணப்படுவது போல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

“எந்த பணய கைதியையும் விடுவிக்கமாட்டோம் என அவர்கள் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கைக்கு இது முரண்படுகிறது. அனைத்து பணய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என விதித்து இருந்த காலக்கெடு சனிக்கிழமை (15) மதியம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், அதுபற்றி இஸ்ரேல்தான் இனி முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .