2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

பைடன் – நெதன்யா உரையாடல் நிறைவு

Freelancer   / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை மையப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் நிறைவுக்கு வந்துள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சமீபத்தைய தாக்குதலுக்கு பின்னர் ஜோ பைடனுடன் இடம்பெறும் முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலாக இது கருதப்பட்டது.

 

குறித்த கலந்துரையாடல் நேற்று (9) இடம்பெற்றது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கலந்துரையாடல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் கலந்துரையாடல் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியாகும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது

 

இந்த கலந்துரையாடலில், கமலா ஹரிஸ் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X