2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

புட்டினை விமர்சித்த ரஷ்ய பாடகர் உயிரிழப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விமர்சித்த ரஷ்ய பாடகர், தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10ஆவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். 

கடந்த புதன்கிழமை (5), பொலிஸ் சோதனையின் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் இராணுவத்துக்கு நன்கொடை அளித்ததாகவும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை "முட்டாள்" என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.

மேலும், உக்ரைன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, அவரது வீட்டில், பொலிஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .