2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

பச்சை நிறத்தில் ஜொலிக்கும் நதி; ஏன் தெரியுமா?

Ilango Bharathy   / 2022 மார்ச் 16 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் ஆண்டு தோறும் மார்ச் 17ஆம் திகதி
‘புனித பட்ரிக்ஸ் தினம்‘ ( Patricks Day) கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு
வருகிறது.

இத்தினத்தில் பச்சை நிற ஆடை அணிந்து மக்கள் வீதிகளில் வலம்
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இத் தினத்தில் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக சிகாகோ நதியில் பெரிய படகுகள் மூலம் பச்சை நிறச் சாயம் கலக்கும் பணிகள் அண்மைக் காலமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச்சாயத்தினால் குறித்த நதியானது ஏழு நாட்கள் வரை பச்சை நிறமாகக்
காட்சியளிக்கும் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X